கமல் மீது செருப்பு வீசி பாரத் மாதாகி ஜே கோஷங்களை எழுப்பிய இந்து மக்கள் கட்சியினர் கைது

0

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், கோட்சே குறித்த கருத்துகளை தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும், அவரது கட்சிக்கும் தடைவிதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் நேற்று கமல்ஹாசன் திருப்பரங்குன்ற சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரச்சாரப் பொது கூட்ட மேடையை நோக்கி காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாரத் மாதாகி ஜே என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா அமைப்பை சேர்ந்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply