கருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

0

கருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

நக்கீரன் வாரமிருமுறை இதழின் ஆசிரியர் கோபால் இன்று (அக்டோபர் 9, 2018) புனே நகருக்கு விமானம் மூலம் செல்ல சென்னை விமான நிலையம் சென்ற போது கைது செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கின்றது. கல்லூரி மாணவிகளை பாலியல் உறவுக்கு நிர்ப்பந்தித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சாட்டப்பட்டு அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது.

பேராசிரியை நிர்மலா தேவி கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தனக்கு தெரியும் என்றும் ஆளுநர் மாளிகைக்கு தான் சென்று வந்ததையும் விசாரணையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி மாநில ஆளுநரின் பெயரும் இந்த வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டது. இந்த வழக்கு மற்றும் அதன் விசாரணை குறித்து நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுதியதற்காகத்தான் அதன் ஆசிரியர் கோபால் இன்று (09.10.2018) கைது செய்யப்பட்டதை காவல்துறையிடம் கொடுக்கப்பட்ட புகார் மூலம் அறிய முடிகிறது.

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124 -ன் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் அவர்கள் இந்த பிரிவின் கீழ் அவரை கைது செய்திட இயலாது என்று கூறி அவரை விடுதலை செய்தார். ஒரு செய்தியை வெளியிட்டதற்காக ஆளுநர் பணியில் குறுக்கிட்டதாக குற்றம் சுமத்தி ஒரு பத்திரிகை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலம் கருத்துரிமைக்கு எதிரான தனது சகிப்பின்மையை மாநில அரசு வெளிப்படுத்தியுள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

 

Goto Index

 

Comments are closed.