கருப்புப் பணம் பதுக்கிய 50 இந்தியர்களின் விவரங்களை வெளியிட ஸ்விஸ் வங்கி முடிவு

0

ஸ்விட்சர்லாந்தில் கறுப்பு பணத்தை முதலீடு செய்துள்ள 50 இந்தியர்கள் குறித்த விவரங்களை இந்திய அரசுக்கு ஸ்விஸ் வழங்க முடிவு செய்துள்ளது.

கடந்த முறை மோடி ஆட்சியின்போது ஸ்விஸ் வங்கிகளில் உள்ள கணக்கு குறித்த விவரங்களை விரைவில் பெற உள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் ஸ்விட்சர்லாந்து அரசு 50 வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க உள்ளது. இந்த கணக்குகள் அனைத்திலும் பல சட்ட விரோதமாக ஈட்டிய வருமானம் முதலீடு என ஸ்விஸ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த கணக்குகளை பல பெரிய தொழிலதிபர்கள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களின் வருமான விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க ஸ்விஸ் அதிகாரிகள் இந்த இந்தியர்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த நோட்டிஸுக்கான பதில் கிடைத்த உடன் அவற்றையும் இந்திய அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.