கர்நாடகாவில் இருந்து கோவா மாட்டிறைச்சியை இறக்குமதி செய்துகொள்ளலாம்: பாஜக-வின் மனோகர் பரிக்கார்

0

கோவாவில் மாட்டிறைச்சி தட்டுப்பாட்டை தவிர்க்க கர்நாடகாவில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்துகொள்ளலாம் என்று பாஜகவை சேர்ந்த கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கார் கடந்த செவ்வாய் கிழமை தெரிவித்துள்ளார்.

கோவா சட்டசபையில் இது குறித்து பேசிய மனோகர் பரிக்கர், “மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கர்நாடகாவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை தாங்கள் புறந்தள்ளிவிடவில்லை.” என்று கூறியுள்ளார்.

மேலும்,” அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிரைச்சிகள் தகுதிவாய்ந்த மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படுமே அன்றி வேறு எவராலும் இல்லை என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று பாஜக எம்எல்ஏ நிலேஷ் கப்ரல்-லின் கேள்விக்கு அவர் பதில் கூறியுள்ளார்.

இன்னும் நாளொன்றிற்கு 2000 கிலோ மாட்டிறைச்சி கோவாவின் போண்டா பகுதியிலுள்ள கோவாவின் ஒரே சட்டப்பூருவமான கோவா இறைசிக் கூடத்தில் வைத்து அறுக்கப் படுகிறது என்றும் மீதமுள்ள மாட்டிறைச்சித் தேவைகள் கர்நாடகாவில் இருந்து பெறப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கர்நாடகா இறைச்சி கூடத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து விலங்குகளை எடுத்து வருவதை தடுக்கும் நோக்கம் அரசிற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மாட்டிறைச்சி அரசியல் செய்யும் பாஜக தான் ஆளும் மாநிலத்தின் மாட்டிறைச்சித் தேவையை அண்டை மாநிலங்களில் இருந்து பெறுவோம் என்று கூறுவதில் இருந்து இவர்களின் பசு பாதுகாவல் குறித்த கோஷங்களின் உண்மை நிலையை அறிய முடிகிறது.

Comments are closed.