கர்நாடகாவில் தலித் குடும்பத்தை தாக்கிய பஜ்ரங்தள் அமைப்பினர்

0

தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உத்திர பிரதேசம், பீகார், குஜராத், மகாராஷ்டிராவை தொடர்ந்து தற்பொழுது கர்நாடகாவிலும் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் ஒரு தலித் குடும்பத்தினர் மாட்டிறைச்சி உண்டனர் என்று கூறி அவர்களை பஜ்ரங்தல் அமைப்பினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக Karnataka Communal Harmony Forum அமைப்பு புகாரளித்துள்ளது. அந்த புகாரில் சுமார் 40 இல் இருந்து 50 பேர் அடங்கிய கும்பல் இந்த குடும்பத்தினரை கடுமையாக தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் இந்த தாக்குதலில் அக்குடும்பத்தில் உள்ள ஊனமுற்ற ஒருவரும்  தப்பவில்லை.

ஆனால் பஜ்ரங்தள் அமைப்பினர்களோ இந்த தாக்குதலையும் நடத்திவிட்டு தாக்கப்பட்ட குடும்பத்தினர் மீது அவர்கள் பசுவை திருடி கொன்று உண்டதாக புகாரளித்துள்ளனர்.

இது குறித்து காவ்துறை துணை ஆய்வாளர் சந்திரசேகர் கூறுகையில், இந்த தலித் குடும்பத்தினரின் வீட்டை சோதனையிட்டதில் ஐந்து பேர் இறைச்சியை வெட்டிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்த பசு திருடப்பட்டதா என்று தற்பொழுது விசாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தற்பொழுது 7 பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.