கர்நாடகா: வதந்தி மேல் வதந்தி பரப்பி கலவரம் ஏற்படுத்த நினைக்கும் பாஜக

0

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடாவில் உள்ள ஹோண்னாவர் பகுதியில் 14 வயது சிறுமி சிறுபான்மை சமூகத்து இளைஞர்களால் கற்பழிக்கப்பட்டதாக வதந்தி பரப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்ப்பட்டு சில வன்முறைச் சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் விநாயக் படில் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், குறிப்பிட்ட அந்த பெண் தன்னை பலநாட்களாக பின்தொடர்ந்து வருபர்வரிடம் இருந்து தப்ப தன்னைத் தானே காயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

“கணேஷ் ஈஸ்வர் நாயக் என்ற மொகோடு கிராமத்தை சேர்ந்த ஒருவன், தான் பள்ளி செல்லும் (8 கிலோ மீட்டர் தொலைவு) வழியில் தன்னை தொடர்ந்து வந்து கற்பழிக்க கூடும் என்று அப்பெண் அஞ்சியுள்ளார். கணேஷ் ஈஸ்வர் அப்பெண்ணை கடந்த ஆறு மாதங்களாக தொந்தரவு செய்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.” என்று காவல்துறை கண்காணிப்பாளர் படில் தெரிவித்துள்ளார்.

தான் ஏற்படுத்திய காயங்களுக்கு பேன்ட் ஐட் வாங்க அப்பெண் சென்றபோது கடை உரிமையாளர் காயம் ஏற்பட்ட காரணத்தை குறித்து கேட்டுள்ளார். அப்போது தன்னை இருவர் கடத்த முயன்றதாக அப்பெண் கூறியதாக தெரிகிறது. இத்துடன் மேலும் சில கதைகளை அந்த கடை உரிமையாளர் சேர்த்து இரு முஸ்லிம் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சுற்றியதாகவும் கூறியது அவர்கள் தான் அப்பெண்ணை கற்பழிக்க முயன்றதாகவும் கூறவே அது அங்கு இந்து முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பெண்ணிடம் உண்மையில் நடந்தவை குறித்து மகிலா சந்த்வானா கேந்திரா அமைப்பு ஆலோசகர் விசாரிக்க, அப்பெண் உண்மையில் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனையடுத்து கணேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் ஆறாம் தேதி முதல் உத்தர கன்னட பகுதியில் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்து ஒரு இந்துப் பெண்ணை கற்பழிக்க முயன்றதாக பரப்பட்ட வந்ததி அப்பகுதியின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இத்துடன் பாஜக எம்பி தனது ட்விட்டரில் இது தொடர்பான வதந்தியை பரப்பியது அப்பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்தது. கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி கர்நாடகா பாஜக பொதுச் செயலாளர் ஷோபா கராந்த்லஜே “ஜிஹாதிகள் ஒரு பள்ளி மாணவியை கற்பழித்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.”’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். பாஜக வின் உடுப்பி-சிக்மகளூர் எம்.பி யோ “இந்த அரசு ஏன் இந்நிகழ்வு குறித்து அமைதி காக்கிறது” என்று அவரது பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இப்பகுதியில் முன்னதாக கடந்த டிசம்பர் ஆறாம் தேதி அன்று பரேஷ் மேஸ்தா என்பவரது உடல் ஹோண்னவர் குளம் அருகில் இருந்து மீட்கப்பட்டது. அப்போதும் இதே போன்று எவ்வித ஆதாரமும் இன்றி பரேஷ் மேஸ்தாவை முஸ்லிம்கள் தான் கொலை செய்தார்கள் என்றும் இன்னும் அவரது உடலில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது தலை இரண்டாக பிளக்கப்பட்டது என்றும் அவரது மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்டது என்றும் தங்களது கற்பனைகளை அனைத்தையும் பாஜக வின் ஷோபா கராந்த்லஜே தனது ட்விட்டர் பக்கத்தில் வதந்தி பரப்பினார். பல போலி செய்திகளை பரப்பும் இந்துத்வா ஆதரவு செய்தித்(?) தளங்களும் இதனை அப்படியே கிளிப்பிள்ளை போன்று பரப்பின. சில முன்னணி ஊடகங்களும் இந்த போலிச் செய்திகளுக்கு பலியானது. இந்த சம்பவத்திற்கு சற்றும் தொடர்பில்லாத பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது பாஜக பழிக்கூறியது.

Pic Coutesy:Altnews.in

 

இதனை தொடர்ந்து உத்தர கன்னடா எம்பியும் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் ஹெட்கே கர்நாடகாவில் மேலும் பல வன்முறைகள் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “முதலமைச்சர் மிகப்பெரிய மரிக்கம்ப ஹப்பாவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  மரிகம்ப ஹப்பா என்பது கடவுளுக்காக பறவைகள் மற்றும் விலங்குகளை பலியிடும் அப்பகுதியின் வருடாந்திர சடங்கு ஆகும்.

ஆனால் பரேஷ் மேஸ்தாவின் மரணம் குறித்து விசாரணை செய்த காவல்துறையின் தடவியல் துறை இந்த வதந்திகளுக்கான விரிவான பதிலை கொடுத்துள்ளது. அதில் ஆயுதங்களால் பரேஷ் மேஸ்தா தாக்கப்பட்டதற்கான எந்தவித ஆதாரங்களும் அவரது உடலில் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் பரேஷ் உடலில் சிவாஜியின் உருவமும் ஹிந்தியில் மராத்தா என்ற எழுத்தும் இருந்தது என்றும் அது அவரை தாக்கியவர்களால் சேதப்படுத்தப்பட்டது என்ற வதந்திக்கும் தடவியல் துறை மறுப்பு தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் பரேஷ் மீது சூடான தண்ணீரோ எண்ணெயோ அல்லது ரசாயன திரவமோ ஊற்றப்படவில்லை என்றும் தடவியல் துறை தெரிவித்தது. தடவியல் துறை அளித்த முழுமையான பதில்கள் படத்தில்.

Pic Courtsy: Altnews.in

இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்து பள்ளி மாணவியை முஸ்லிம் இளைஞர்கள் கற்பழித்து கொலை செய்ய முயற்சித்தனர் என்று கூறி மேலும் அப்பகுதியின் பதற்றத்தை அதிகரித்து அதில் பாஜக அரசியல் ஆதாயம் தேட நினைப்பது தெளிவாகிறது. கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments are closed.