கர்னல் புரோஹித் தீவிரவாத முகாமை வாழும் கலை நிகழ்ச்சியின் போர்வையில் நடத்தினார்: NIA

0

2008 மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தீவிரவாத பயிற்சி முகாம்களை வாழும் கலை நிகழ்ச்சி என்கிற போர்வையின் கீழ் நடத்தியுள்ளார் என்று தேசிய பாதுகாப்பு படை தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.

பஞ்ச்மார்ஹியில் உள்ள ஒரு விடுதியின் உரிமையாளரின் சாட்சியங்களை இது தொடர்பாக பதிவு செய்துள்ளது தேசிய புலனாய்வுத்துறை. இந்த சாட்சி கூறுகையில், 2005 செப்டெம்பரரில் புரோஹித் தன்னை சந்தித்ததாகவும் ஒரு 40-50 பேர் கலந்துகொள்ளும் வாழும் கலை நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக ரூபாய் 25000 முன்பணமாக மற்றொரு குற்றவாளியான அஜய் ராஹிர்கர் என்பவர் மூலம் கொடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இன்னும் இந்த முகாமிற்காக 6 இல் இருந்து 7 கூடாரங்கள் போடப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் முகாமிற்காக ஏர் ரைபிள் துப்பாக்கிகளை ஏற்பாடு செய்து தருமாறு தன்னிடம் புரோஹித் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் தன்னால் அவற்றை செய்ய இயலாது என்று கூறிவிட்டதாகவும், அவர்களுக்கு தொலைகாட்சி மற்றும் DVD போன்ற ஏர்பாடுகளை தான் செய்து கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த முகாமில் லத்தி பயிற்சி கொடுக்கப்பட்டதை தான் நேரில் கண்டதாகவும் அப்போது அது வாழும் கலையின் முகாம் அல்ல என்பதனை தான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். இந்த முகாம் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது என்றும் அதில் பங்கு பெற்றவர்களை தவிர வேறு எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்று எவர் கூறியுள்ளார். இந்த முகாமின் செலவு ரூபாய் 79,150 என்று கூறிய அவர் அந்த முகாமில் பங்கு பெற்ற அமித் மற்றும் மாருதி வாக் என்ற இருவரை அடையாளம் காட்டியுள்ளார்.

Comments are closed.