கற்பழிப்பு வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று தீர்ப்பு: ஆயுள் தண்டை வழங்கியது நீதிமன்றம்

0

கற்பழிப்பு வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று தீர்ப்பு: ஆயுள் தண்டை வழங்கியது நீதிமன்றம்

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று தீர்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது தாழ்த்தப்பட்டோருக்கான ஜோத்பூர் நீதிமன்றம். இந்த தீர்ப்பு நீதிபதி மதுசுதன் ஷர்மாவால் ஜோத்பூர் மத்திய சிறையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களுக்கு கூட அனுமதி வழங்கப்படாமல் மிகப் பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுளளது. இது குறித்து சிறைத்துறை DIG விக்ரம் சிங் தெரிவிக்கையில், “தீர்ப்பு நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துவிட்டோம். நீதிமன்ற பணியாளர்கள், மாஜிஸ்திரேட், ஆசாராம் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் இருப்பார்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.

ஜோத்பூரில் உள்ள தனது ஆசரமத்தில் வைத்து ஆசாராம் பாபு சிறுமையை பலாத்காரம் செய்த வழக்கில் இறுதிகட்ட விசாரணை கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட ஆசாராம் பாபு ஏழு முறை பிணைக்கு விண்ணப்பித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த ஏழு முறையும் அவரது பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

உத்தர பிரதேசின் சாஜஹான்பூரை சேர்ந்த சிறுமி, தான் மத்திய பிரதேசின் சிந்த்வாராவில் உள்ள ஆசாராம் பாபு ஆசரமத்தில் தங்கி பயின்று வந்த போது ஆசாராம் தன்னை ஜோத்பூரில் உள்ள அவரது ஆசரமத்திற்கு அழைத்து 2013 ஆகஸ்ட் 15 அன்று இரவு தன்னை கற்பழித்ததாக புகாரளித்தார். இதன் பின்னர் இந்தூரில் இருந்து கைது செய்யப்பட்ட ஆசாராம் ஜோத்பூருக்கு 2013  செப்டெம்பர் மாதம் 1 ஆம் தேதி கொண்டுவரப்பட்டார். பின்னர் ஆசாராம் பாபு, மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிவ, சில்பி, சரத் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு எதிராக 2013 நவம்பர் 6 ஆம் தேதி POSCO சட்டம், சிறுவர் நீதி சட்டம், மற்றும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஆசாராம் பாபுவிற்கு எதிராக சாட்சி கூற வந்த ஒன்பது சாட்சியங்கள் தாக்கப்பட்டு அதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இவரின் மகன் நாராயண் சாய் தனது தந்தையின் பெண் சீடர் ஒருவரை 2002 இல் இருந்து 2005 வரையிலான காலகட்டத்தில் சூரத்தில் உள்ள அவர்களது ஆசரமத்தில் வைத்து கற்பழித்ததாக குற்றச்சாட்டும் உள்ளது. நரேந்திர மோடி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட பல முக்கிய பாஜக தலைவர்கள் ஆசாராம் பாபுவின் ஆசரமத்திற்கு அடிக்கடி சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.