கலக்டர் பதவியை இராஜினாமா செய்த 2 தினங்களில் பாஜக வில் இணைத்த IAS அதிகாரி

0

கலக்டர் பதவியை இராஜினாமா செய்த 2 தினங்களில் பாஜக வில் இணைத்த IAS அதிகாரி

சத்தீஸ்கர் மாநிலத்தில் 13 வருடங்களாக ஆட்சியராக பணியாற்றி வந்தவர் ஓம் பிரகாஷ் சவுத்திரி. சமீபத்தில் தனது ஆட்சியர் பதவியை இராஜினாமா செய்த இவர், இராஜினாமா செய்த இரண்டு தினங்களில் அமித்ஷா முன்னிலையில் பாஜக வில் இணைந்துள்ளார்.

தனது இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த அவர், தான் ஆட்சியாராக பணியாற்றிய பதவிக்காலம் குறித்து மிகவும் மனநிறைவுடன் உள்ளதாகவும் தனது பதவிக்கென்று சில வரைமுறைகள் இருப்பதால் தான் பதவியை இராஜினாமா செய்து மக்களுக்கு பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் நக்சல் அமைப்புகளால் நிறைந்த பகுதிகளில் பல முன்னேற்ற பணிகளை செய்துவந்ததாக கூறப்படுகிறது.

பாஜக தலைவர் அமித்ஷா உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர், தான் பாஜக வில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். பாஜக வில் தன்னை இணைத்துக்கொண்ட இவர், வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் கர்ஷியா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இவ்வருட இறுதியில் தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.