கலைஞர் கருணாநிதி வாழ்க்கை சுவடுகள்!

0

கலைஞர் கருணாநிதி வாழ்க்கை சுவடுகள்!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான கலைஞர் மு.கருணாநிதி அக்கட்சியின் தலைவராக 50வது ஆண்டியல் அடியெடுத்து வைத்துள்ளார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான கருணாநிதி அரசியல் தவிர்த்து சினிமா, கலை, இலக்கியம், பத்திரிகை, நாடகம் என பல துறைகளிலும் கைதேர்ந்தவர் கருணாநிதி. அவர் பற்றிய சிறு வாழ்க்கை குறிப்பு உங்களுக்காக…

பிறப்பு மற்றும் குடும்பம்

– நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இசை வேளாளர் சமூகத்தில் பிறந்த கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. கருணாநிதிக்கு மூன்று மனைவிகளும், 6 பிள்ளைகளும் உள்ளனர்.

முதல் மனைவி பெயர் பத்மாவதி, இவருக்கு பிறந்தவர்கள் மு.க. முத்து மற்றும் செல்வி. இரண்டாவது மனைவி தயாளு அம்மாள், இவருக்கு பிறந்தவர்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் மற்றும் மு.க. தமிழரசு. மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள், இவருக்கு கனிமொழி என்ற ஒரே மகள்.

அரசியல் ஆர்வம்

நீதிக்கட்சியின் அழகிரிசாமி பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14வது வயதில் சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சில இளைஞர்களுடன் இணைந்து மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். சில காலம் கழித்து அந்த மறுமலர்ச்சி அமைப்பு மாநில அளவிலான ‘அனைத்து மாணவர்களின் கழகம்’ என்றானது. ‘மாணவ நேசன்’ என்ற பெயரில் துண்டு பதிப்புகளை நடத்தி வந்த கருணாநிதி, தி.மு.க.வில் இணைந்தபோது அதனைத்தான் ‘முரசொலி’யாக மாற்றினார்.

1953ல் சிமெண்ட் ஆலையை மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டம்தான் கருணாநிதியின் முதல் போராட்டம். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை கருணாநிதி தலைமையேற்று நடத்தினார். தேசிய மொழிகள் சட்ட எதிர்ப்பு போராட்டம் நடத்திய கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.