கல்வித்துறைக்குள் காவி ஆடுகள்

0

கல்வித்துறைக்குள் காவி ஆடுகள்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். இளம் வயதில் நம் மனதில் பதியும் ஒவ்வொரு விசயமும் பசுமரத்தாணி போல் ஆயுட் காலம் முழுதும் நினைவில் இருக்கும். இந்த பருவத்தில் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களை விட பள்ளி ஆசிரியர்களுடனே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லுபதேசங்களை கூறினாலும் பள்ளியில் ஆசிரியர்களிடமும், சக நண்பர்களிடமும் அவர்கள் கற்றுக்கொள்வதுதான் அவர்களது குணாதிசயங்களை பெரும்பாலும் முடிவு செய்கிறது.

இப்படி எதிர்கால தலைமுறையை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தான ஒன்றாக திகழ்கிறது. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் மனதில் இன்று எதை விதைக்கிறார்களோ அது பிற்காலத்தில் மிகப்பெரிய மரமாகி நிற்கிறது. அது பயனுள்ள தென்னை மரமா? அல்லது கொடிய விஷ மரமா? என்பது ஆசிரியர்களின் கற்பித்தலை பொறுத்தது. ஆனால், இங்கு ஆசிரியர்கள் மனதிலேயே நஞ்சை விதைக்கும் கொடுஞ்செயல் அண்மை காலங்களில் அரங்கேறி வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்குள் ஊடுருவி இருக்கும் சில காவி ஆடுகளின் வாயிலாக இதனை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது சங்கபரிவார சக்திகள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.