கல்வித்துறையை காப்பவர் யாரோ?

0

கல்வித்துறையை காப்பவர் யாரோ?

அதிகாரத்தை நிலைநாட்ட முற்படுபவர்கள் கையில் எடுக்கும் துறைகளுள் முக்கியமானது கல்வித்துறை. குறுக்கு புத்தியும் குறை மதியும் கொண்ட சங்கபரிவார்கள் கூட்டம் கல்வித்துறையின் வழியாக தங்கள் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அதிகமான முயற்சிகளை மேற்கொண்டு அதில் ஓரளவு பலன்களையும் அடைந்து விட்டனர். பள்ளிகளை நடத்துவதில் தொடங்கி, அரசு பள்ளி ஆசிரியர்களை கூட தங்கள் வலையில் சிக்க வைப்பதில் அவர்கள் வெற்றி அடைந்து விட்டனர் என்பதுதான் உண்மை. இதற்காக சங்கபரிவாரின் துணை அமைப்புகள் வெவ்வேறு பெயர்களில் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத போதே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இன்னும் வேகமாகவே தங்கள் திட்டங்களை செயல்படுத்துவார்கள். 1999 முதல் 2004 வரை இவர்களின் ஆட்சிக் காலத்திலும் தற்போதைய ஆட்சியிலும் இதை நாம் கண்டோம், கண்டு வருகிறோம். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து புதிய கல்விக் கொள்கையை வரையறுக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக அவர்களால் இக்கொள்கையை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர இயலவில்லை. கல்விக் கொள்கைக்கான திட்ட வரைவை சமர்ப்பிப்பதற்கு செப்டம்பர் மாத இறுதி வரை கஸ்தூரி ரங்கன் கமிட்டிக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னரே தனது திட்டங்களை கல்வித் துறையில் நுழைத்து விட வேண்டும் என்பதில் மோடி தலைமையிலான அரசு மும்முரமாக உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு மாற்றமாக புதிய ஆணையத்தை கொண்டு வருவதற்கான முயற்சி, தேர்வு முறைகளில் மாற்றம் என மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்புகள் இதனை உறுதி செய்கின்றன. ஒரு வேளை எதிர்ப்புகள் காரணமாக புதிய கல்விக் கொள்கை மூலம் தங்களின் திட்டங்களை நிறைவேற்ற இயலாமல் போனாலும் புதிய சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் மூலம் அதனை நிறைவேற்றலாம் என்பதுதான் மோடி அரசின் திட்டம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.