கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்களை துப்பாக்கியால் நெஞ்சில் சுட வேண்டும்: பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து

0

மேற்குவங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்று வாக்குப்பதிவில் பா.ஜ.கவினருக்கும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மோதலில் பாதுகாப்புக்காக இருந்த அதிகாரிகள் மீதும் கற்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த கல்வீச்சு தாக்குதல் குறித்து மேற்குவங்க மாநில பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ், “அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களை துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு வீழ்த்த வேண்டும்” என தெரிவித்தார். பா.ஜ.க தலைவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.