கழுதை மீது சவாரி செய்து வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு

0

கழுதை மீது சவாரி செய்து பீகாரை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவர் மிருகங்களை துன்புறுத்தியாக கூறி, அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மணிபூஷன் சர்மா என்ற அந்த வேட்பாளர், தனது குதிரை சவாரியை நியாயப்படுத்தி பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், அப்பாவி மக்கள் மீது அரசியல்வாதிகள் சவாரி செய்கின்றனர். அதனை குறிப்பால் உணர்த்தவே இவ்வாறு செய்ததாக சர்மா தெரிவித்தார்.

மணிபூஷன் சர்மா போட்டியிடவிருந்த ஜெகனாபாத் மக்களவை தொகுதியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

Comments are closed.