கஷ்மீரிகள் இல்லாத கஷ்மீரை வேண்டுகிறது பா.ஜ.க. : திக்விஜய் சிங்

0

கஷ்மீரிகள் இல்லாத கஷ்மீரை வேண்டுகிறது பா.ஜ.க. என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சியினை பொறுத்தவரையில் கஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலைநாட்டபப்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். பா.ஜ.க விற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் காங்கிரஸ் கஷ்மீரை கஷ்மீர் மக்களுடன் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் பா.ஜ.கே கஷ்மீரை கஷ்மீரிகள் இல்லாமல் வேண்டுகிறது. கஷ்மீரிகள் இல்லாத கஷ்மீரை எப்படி நீங்கள் பெறுவீர்கள்?” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் உடனேயான தோழமை பொய்த்துவிட்டது என்றும் கஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது உண்மை முகத்தினை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.