கஷ்மீரில் தொடரும் கொடூரம்

0

கஷ்மீரில் தொடரும் கொடூரம்:

பள்ளித் தலைமை ஆசிரியர்

போலீஸ் காவலில் மரணம்!

பூமியின் சொர்க்கலோகம் என்றறியப்பட்ட ஜம்மு கஷ்மீர் மக்கள் இன்று சபிக்கப்பட்ட மக்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து நிம்மதியைத் தொலைத்த அவர்கள் படும் அல்லல்களும் அவலங்களும் ஏட்டில் வடிக்க முடியாதவை.

எத்தனை கொலைகள், எத்தனை பாலியல் பலாத்காரங்கள், எத்தனை பலிகள், காணாமல் ஆக்கப்பட்டுள்ள எத்தனை இளைஞர்கள், பரிதவிப்பில் எத்தனை தாய்மார்கள், விதவையாக்கப்பட்டுள்ள எத்தனை இளம் பெண்கள், நடுத்தெருவில் நிற்கும் எத்தனை குடும்பங்கள், எத்தனை சித்திரவதைகள், எத்தனை காவல் மரணங்கள், எத்தனை கொடுமைகள், எத்தனை சோகங்கள்..

அந்தக் கொடுமைகளின் வரிசையில் இன்னொரு போலீஸ் காவல் படுகொலை. முப்பதே வயதான அழகிய இளம் வாலிபர். ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் என்ற கண்ணியத்திற்குரிய பதவியில் இருப்பவர்.

இந்த இளைஞரை மார்ச் 17ம் தேதி அவரது வீட்டிலிருந்து இழுத்துச் சென்றது காவல்துறை. உயிரோடு அந்த வீட்டை விட்டகன்ற அந்த ஜீவன், உயிரற்ற சவமாக அந்த வீட்டிற்குத் திரும்பி வந்தது.

ரிஸ்வான் அஸத் பண்டிட் என்ற அந்த இளைஞர் தெற்கு கஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில், அவந்திப்பூர் என்ற ஊரைச் சார்ந்தவர். மார்ச் 17ம் தேதி அவரது வீட்டினுள் அடாவடியாய் நுழைந்த காவல்துறை, வீட்டை சல்லடை போட்டுத் தேடியது.

தேடுதல் வேட்டை முடிந்த பின்னர், “தீவிரவாத வழக்கு சம்பந்தமாக விசாரிக்க வேண்டும்” என்று கூறி ரிஸ்வானை இழுத்துச் சென்றனர். 18ம் தேதி இரவு முழுவதும் அவரை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சித்திரவதை செய்து அநியாயமாக கொன்றுள்ளனர் படுபாவிகள். 19ம் தேதி அதிகாலையே செய்தி கசிந்து சமூக வலைத்தளங்களில் வலம் வரத் தொடங்கியது. 19ம் தேதி அன்று மாலை மாநிலக் காவல்துறையும் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.