கஷ்மீரில் பதற்றம்: வீட்டுக்காவலில் தலைவர்கள்

0

கஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களான செய்யத் அலி ஷா ஜீலானி, மிர்வைஸ் உமர் ஃபாரூக் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட கடை அடைப்பினால் இயல்பு வாழ்க்கை அங்கு பாதிக்கப்பட்டதுள்ளது. இந்த தலைவர்கள் கஷ்மீர் பதற்றத்தில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை கண்டித்து லால் சவுக் நகர பகுதிக்கு பேரணி செல்வதாக இருந்தனர்.

இவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “ஜீலானி மற்றும் மிர்வைஸ் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.” என்று கூறியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி கஷ்மீரில் தொடங்கிய பதற்றத்தை தொடர்ந்து கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் மரணங்களுக்கு எதிராக லால் சவுக் பகுதியில் இவர்கள் பேரணி நடத்த இருந்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் லால் சவுக்கில் உள்ள மணிகூண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை மக்கள் கூடிவிடாமல் தடுத்து முடக்கியுள்ளனர்.

அப்பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள கடை அடைப்பை தொடர்ந்து அனைத்து கடைகளும் வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளது. ஆயினும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்துகள் இயங்கிக் கொண்டிருன்கின்றன. காஷ்மீரின் மற்ற பகுதிகளிலும் கடை அடைப்புகள் நிகழ்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எங்கும் வன்முறை எதுவும் இல்லாமல் அமைதியாக செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புர்ஹான் வாணி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தில் 86 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

Comments are closed.