கஷ்மீரில் லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தின் இந்து உறுப்பினர் கைது

0

உத்திர பிரதேச மாநிலம் முசப்பர்நகரை சேர்ந்த சந்தீப் குமார் ஷர்மா என்பவர் லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறி ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்துள்ளது.

இவர் கடந்த 2012 முதல் பணிநிமித்தமாக காஷ்மீர் மாநிலத்தில் வசித்து வந்தவர் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் இந்திய ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட பல தாக்கதலுக்கு உடந்தையாக இருந்தவர் என்றும் பல ATM கொள்ளைகளில் ஈடுபட்டவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியே ஒரு லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இது வரை கைது செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாகவோ அல்லது கஷ்மீர் பகுதியை சேர்ந்தவரகாவோ மட்டுமே இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2012 இல் பணி நிமித்தமாக கஷ்மீர் சென்ற சந்தீப் குமார் ஷர்மா, குளிர்காலங்களில் வேலை தேடி பஞ்சாப் செல்பவர் என்றும் இவர் ஜனவரி மாதம் ATM களை கொள்ளையிடும் திட்டத்துடன் மீண்டும் கஷ்மீர் வந்து லஷ்கர் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு லஷ்கர் இயக்கத்தின் பஷீர் லஷ்கரி யின் உதவியாளராக செயல்பட்டுள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக இவ்வருடத்தில் இவர் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் ஐந்து ATM கொள்ளைகளை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் காசிகந்த் பகுதியில் இந்திய இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் ஆனந்த்னக் பகுதியில் நடைபெற்ற ஆயுத திருட்டிலும் அசாபல் பகுதியில் நடைபெற்ற காவல்துறையினர் மீதான தாக்குதல்களிலும் ஈடுபட்டவர் என்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் முனீர் கான் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பான மேற்படி விசாரணைக்காக உத்திர பிரதேச காவல்துறையின் உதவியை தாங்கள் நாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக ஷர்மா ஒரு தீவிரவாதிதான் என்றும் தற்போது பலர் தங்களின் சுய லாபங்களுக்காக தீவிரவாத இயக்கங்களில் சேர்கின்றனர் என்றும் லஷ்கர் தீவிரவாதிகள் ஷர்மாவை பலமுறை பல தீவிரவாத செயல்களுக்காக பயன்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலையில் கறுப்புப் பையுடன் முகம் மறைக்கப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்களிடம் காட்டப்பட்ட ஷர்மா தனது பெயரை ஆதில் என்று கூறிக்கொண்டு கஷ்மீரில் வளம் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இவர் ஒரு கஷ்மீரி அல்லாதவர் என்பதாலும், இவரது வாகனம் உத்திர பிரதேச மாநில பதிவு எண் கொண்டாத இருந்ததினாலும் இவர் மீதான சந்தேகம் மிகக் குறைவாக இருந்துள்ளது. சந்தீப் குமார் ஷர்மாவுடன் குல்கம் பகுதியை சேர்ந்த முனீப் ஷா என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த கைதுகள் கஷ்மீரில் அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது. மேலும் சந்தீப் குமார் ஷர்மாவின் கைது கஷ்மீருக்கு பணிநிமித்தமாக வருபவர்கள் மீதான காவதுறையின் கவனத்ததை அதிகப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Comments are closed.