கஷ்மீரை விட்டு சுற்றலா பயணிகளை விரட்டும் டைம்ஸ் நவ், ரிபப்ளிக், நியுஸ்X: மெஹ்பூபா முஃப்தி புகார்

0

கஷ்மீரை விட்டு சுற்றலா பயணிகளை விரட்டும் டைம்ஸ் நவ், ரிபப்ளிக், நியுஸ்X: மெஹ்பூபா முஃப்தி புகார்

பிரபல செய்தி தொலைக்காட்சிகளான டைம்ஸ் நவ், ரிபப்ளிக், நியுஸ்X ஆகிய தொலைக்காட்சிகள் கஷ்மீரை மிக மோசமானதாக சித்தரித்து அங்கு வர இருக்கும் சுற்ற பயணிகளை விரட்டுகின்றனர் என்றுகஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார். முப்பது வருடங்களுக்கு பிறகு கஷ்மீரில் நடைபெறும் Travel Agents Association of India (TAAI)இன் வருடாந்திர மாநாட்டில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறிய அவர், “நாம் கடினமாக காலத்தில் உள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. மேலும் நீங்கள் எங்களுடன் கரம் கோர்க்க வந்தது மகிழ்ச்சி. நீங்கள் இங்கு இருக்கும் போது எங்கோ ஒரு பகுதியில் ஒரு என்கெளண்டர் நடைபெறுமாயின் அதனை இந்த ஊடகங்கள் மொத்த கஷ்மீரும் பற்றி எறிவது போல் காட்சிபடுத்துவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “உலகின் எந்த பகுதியை நீங்கள் பார்த்தாலும் அங்கு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் எங்களது பிரச்சனை என்னவென்றால் எங்களை நம் நாடு தனிமையில் விட்டுவிட்டது. நாங்கள் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருகிறோம். என் தந்தை எப்போதும் கூறுவார், சுற்றுலாத்துறை அமைத்திக்கான முதலீடு என்று. எல்லையில் இராணுவ வீரர்கள் உள்ளதும் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுவதும் இந்த பிரச்னையை எதிர்கொள்ளும் ஒரு வழி. மற்றொன்று இங்கு சுற்றுலாத்துறையை முன்னிறுத்துவது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இந்த தொலைகாட்சிகள் அச்சுறுத்துகின்றன என்றும் எங்காவது ஒரு மோதல் நடைபெற்றால் இங்கு வந்திருக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு அவர்களின் குடும்பத்தினர் அழைப்புகள் விடுத்து டைம்ஸ் நவ், ரிபப்ளிக், நியுஸ்X காட்டும் கஷ்மீரிலா நீங்கள் இருக்கின்றீர்கள் என்று கூறி நலம் விசாரிக்கின்றனர் என்றும் இந்த தொலைக்காட்சிகள் மொத்த கஷ்மீரும் பற்றி எறிவது போல் செய்தி வெளியிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளர்.  இத்துடன் ஜம்மு கஷ்மீர் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்று அவர் தெரிவித்துள்ளார். “நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் ஒன்று உண்டென்றால் அது கஷ்மீர் தான்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016  ஆம் ஆண்டு புர்ஹான் வாணி கொல்லப்பட்டதை அடுத்து ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற கடையைப்பு மற்றும் போராட்டத்தால் கஷ்மீரில் சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.