கஷ்மீர்: அமர்நாத் யாத்ரிகர்களை காப்பாற்றிய முஸ்லிம்கள்

0

பாதுகாப்பு படையினரின் அடக்குமுறைகள், துப்பாக்கி சூடு என நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் கஷ்மீர் மக்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது விபத்தில் சிக்கிய அமர்நாத் யாத்ரிகர்களை காப்பாற்றி தங்கள் மனிதாபிமானத்தை மீண்டும் ஒரு முறை பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு உத்தரவுகளையும் மீறி தங்களை காப்பாற்றிய கஷ்மீர் முஸ்லிம்களை அமர்நாத் யாத்ரிகர்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.
ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அமர்நாத் யாத்ரிகர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மக்களை உள்ளூர் முஸ்லிம்கள் மீட்டு மருத்துவமனைகளுக்கு எடுத்து சென்றனர். சம்பவம் நடைபெற்ற பிஜ்பெஹாரா பகுதியில் சமீபத்தில்தான் இரண்டு முஸ்லிம்கள் இறந்தனர். தங்களின் சோகத்தையும் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முஸ்லிம்கள் காயமடைந்தவர்களை தனியார் வாகனங்களில் கொண்டு சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த இக்கட்டான சூழலிலும் அம்மக்கள் தங்கள் மனிதாபிமானத்தை காட்ட தவறவில்லை என்று மற்றொருவர் தெரிவித்தார்.

Comments are closed.