கஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை!

0

கஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை!

சிதைந்து போன களிமண் வீடு. மரத்தாலும், பாலித்தீன் தாள்களாலும் வேயப்பட்ட கூரை. இதனுள்ளேதான் குலாம் முஹம்மது பட் என்ற 88 வயது முதியவர் இருந்தார்.

பழைய இரும்பு ட்ரங்குப் பெட்டியைத் திறந்த குலாம், அதிலிருந்து ஒரு பழைய, கிழிந்த உர்து வார இதழை எடுத்து வந்தார். அதன் பக்கங்களைத் திருப்பிய குலாம், கடைசிப் பக்கத்தில் கறுப்பு வெள்ளையில் அச்சடிக்கப்பட்ட ஒரு படத்தைக் காட்டினார்.

“இவள்தான் என் 16 வயது மகள். உள்ளூர் சிறப்பு காவல் படையினர் இரண்டு பேரின் உதவியுடன் இராணுவத்தினர் வந்து என் மகளைக் கடத்திச் சென்றனர்” என்றார் குலாம்.

கஷ்மீரில் தோடா மாவட்டத்தில் தர் என்ற சிறிய கிராமத்தைச் சார்ந்தவர் குலாம். இந்திய இராணுவத்தினர் ஜம்மு கஷ்மீரில் அந்தப் பகுதியில் நடத்திய கொடூரங்களின் வாழும் சாட்சிதான் குலாம்.

ஒல்லியான, இடது கையில் ஊனம் கொண்ட, வெள்ளைத் தாடியுடனும், தொப்பியுடனும் குர்தா அணிந்து பரிதாபத்துடன் காட்சியளித்த குலாம், ஏப்ரல் 22, 2003 அன்று வெளிவந்த ‘ஸதா-இ-கோஷர்” என்ற அந்த உர்து வார இதழை மீண்டும் மீண்டும் படிப்பதில்தான் அதிகமாக தன் நேரத்தைச் செலவழிக்கிறார்.

“அவளது பெயர் மும்தஸா. 2000ம் வருடத்தின் ஆரம்பத்தில் பத்தாவது படித்து முடித்திருந்தாள். மும்தஸா அருகிலுள்ள கஸ்திகர் என்ற ஊரிலுள்ள பள்ளிக்கூடத்திற்கு தினமும் ஒரு மணி நேரம் மலைகளைக் கடந்து நடந்து செல்வாள். ஆங்கிலம் கற்பதில் அவ்வளவு ஆர்வம் அவளுக்கு. ஒரு நாள் ஆசிரியையாக ஆவேன் என்று கனவு கண்டு கொண்டிருந்தாள்” என்று அந்தக் கண்ணீர்க் கதையை ஆரம்பித்தார் குலாம்.

ஜூன் 3, 2000 அன்று நான்கு ஆண் குழந்தைகளுக்கும், நான்கு பெண் குழந்தைகளுக்கும் தந்தையான குலாம், ஹனீஃப், பக்தவர் ஆகிய அவரின் இரண்டு மகன்களை அழைத்துக்கொண்டு தூரத்திலுள்ள ஒரு காட்டுக்கு கால்நடைகளை மேய விடுவதற்காக சென்று விட்டார்.

அப்பொழுது 16 வயதான மும்தஸா பானுவும், அவளின் மூத்த சகோதரியான 19 வயதான ஃபரீதா பானுவும் தங்கள் தாய் ஸூனா பேகத்துடன் வீட்டில் இருந்தனர்.

குலாமின் இரண்டு மகன்கள் குஜராத்தில் மதரசாவில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் இரண்டு மகள்கள் திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டு, தூரத்திலுள்ள கிராமங்களில் தனித்தனியாக வசிக்கிறார்கள்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.