கஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

0

கஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் கஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 624 முனிசிபல் வார்டுகளில் 208 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. 231 வார்டுகளில் போட்டியின்றி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 185 வார்டுகள் காலியாக உள்ளன. 13 வருடங்கள் கழித்து மாநிலத்தில் பல கட்டங்களாக நகர் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் நடைபெற்ற வார்டுகளில் 103 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி 79 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 24 இடங்களிலும் வெற்றி பெற்றது. போட்டியின்றி வெற்றி பெற்ற வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும் பா.ஜ.க. 76 இடங்களிலும் சுயேட்சைகள் 75 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமாக சுயேட்சைகள் 178 இடங்களிலும் காங்கிரஸ் 157 இடங்களிலும் பா.ஜ.க. 100 இடங்களிலும் எம்.ஏ.என்.பி. 2 இடங்களிலும் சஜ்ஜாத் லோனின் பீப்பிள்ஸ் கான்பரன்ஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

நேஷனல் கான்பரன்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் பார்ட்டி ஆகிய இரு மாநில கட்சிகளும் தேர்தலை புறக்கணித்த காரணத்தினால் கஷ்மீர் பள்ளத்தாக்கில் சுயேட்சைகள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். அரசியல் சாசனத்தின் 35கி ஷரத்து குறித்து மத்திய அரசு தெளிவற்ற கருத்தை கொண்டிருப்பதால் இரு கட்சிகளும் தேர்தலை புறக்கணித்தன. முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன் நேஷனல் கான்பரன்ஸ் கட்சியின் இரண்டு நபர்கள் ஸ்ரீநகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.