கஷ்மீர் நிலவரங்களை ஐ.நா தொடர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கும்: பான் கீ மூன்

0

ஐக்கிய நாடுகள் சபை கஷ்மீரில் தற்போது நிலவி வரும் பதற்ற நிலையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளது. முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கஷ்மீர் பிரச்சனையில் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தது.

இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் இன் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் கூறுகையில்,”ஐக்கிய நாடுகள் சபை பல முறை இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் கஷ்மீர் பிரச்சனை குறித்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் காஷ்மீரின் நிலைமையை அங்குள்ள ஐ.நா கண்காணிப்புக் குழு மூலமாக தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்” என்று கூறியுள்ளார்.

கஷ்மீர் நிலவரம் குறித்து பாகிஸ்தானிய பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விகளுக்கு இந்த பதில்களை ஹக் தெரிவித்துள்ளார். மேலும் கஷ்மீரில் பெல்லட் குண்டுகளின் பயன்பாடு நிறுத்தப்படுமா என்று கேட்டதற்கு கஷ்மீர் பிரச்சனையில் ஐ,நா, வின் நிலைபாடு தவிர எதையும் தன்னால் இங்கு கூற இயலாது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.