கஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்

0

கஷ்மீர் பார்வை ரமலானில் போர் நிறுத்தம்

ரமலான் மாதத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசியல் கட்சிகள் முன் வைக்கும் நிலையில் போராளிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ரமலான் மாதம் துவங்குவதற்கு முந்தைய தினம், மே 16 அன்று, கஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்துவதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. பதினெட்டு வருடங்களில் முதன் முறையாக அறிவிக்கப்பட்ட இந்த ஒருபக்க போர் நிறுத்தத்தை போராளிகளும் பிரிவினைவாதிகளும் கருத்தில் கொள்ளவில்லை. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை அவர்கள் உடனடியாக நிராகரித்தனர். இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் தெற்கு கஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சாதேபுரா தகாப் என்ற இடத்தில் காவல்துறையினர் மீது போராளிகள் துப்பாக்கியால் சுட்டனர். ஆயுதங்களை பறிப்பதற்கு போராளிகள் மேற்கொண்ட முயற்சியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

புனித ரமலான் மாதம் மற்றும் அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி, எதிர்கட்சியான தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து ஒரு வாரம் கழித்து மத்திய அரசாங்கம் தனது தரப்பில் இருந்து இந்த போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. இத்தகைய அறிவிப்பு போராளிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கூறி பாரதிய ஜனதா கட்சி ஆலோசனை கூட்டத்தில் இந்த யோசனையை எதிர்த்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


Comments are closed.