கஷ்மீர்: பெல்லட் குண்டுக்கு மற்றுமோர் உயிர் பலி

0

தெற்கு கஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் போராட்டக்காரர்கள் மீது CRPF படையினர் நடத்திய பெல்லட் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் இது போன்று சோபியான் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு பெல்லட் தாக்குதலில் பலர் காயமுற்றுள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமை புல்வாமா பகுதியில் உள்ள ககபோரா வழியாக சென்ற இராணுவ வாகனம் மீது அப்பகுதி இளைஞர்கள் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து CRPF படையினர் நடத்திய பெல்லட் குண்டு தாக்குதலில் ஒவைஸ் ஷாஃபி தர் என்கிற 25 வயது இளைஞர் மார்பில் பெல்லட் குண்டுகள் தாக்கி உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஓவைஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் நசிர் சவுத்திரி தெரிவித்துள்ளார்.

மற்றொரு நிகழ்வில் பாதுகாப்பு படையினருக்கும் பிரிவினைவாதிகளுக்கும் மோதல் நடந்த சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசிய நபர்கள் மீது நடத்தப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் துப்பாக்கிக் குண்டு தாக்கி காயமடைந்துள்ளார்.

நசிர் அஹமத் என்ற 22 வயது இளைஞருக்கு வயிற்றில் குண்டடிப்பட்டு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவருடன் சோபியான் மருத்துவமனையில் மேலும் நான்கு இளைஞர்கள் பெல்லட் குண்டு தாக்குதலால் கண்களில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comments are closed.