கஷ்மீர் ராணுவத்தால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பெண் கடத்தல்

0

கஷ்மீரில் பெண் ஒருவர் ராணுவத்தினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்த வளர்ந்துவரும் இளம் கிரிகட் வீரர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். (பார்க்க செய்தி)

தற்பொழுது அந்தப்பெண்ணின் குடும்பம் ஏப்ரல் 12 ஆம் தேதி முதலே அப்பெண் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று இரவு சுமார் 1 மணி அளவில் அப்பெண்ணின் தந்தைக்கு ஹந்த்வாரா காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு வந்ததாகவும் அங்கு சென்றவர் என்ன ஆனார் என்றும் தற்பொழுது எங்கு இருக்கிறார் என்றும் கூட தெரியவில்லை என்று கூறியுள்ளனர். தற்பொழுது அந்த சிறுமி மற்றும் அவரது தந்தையை காண அவரது குடும்பத்தார்கள் கூட அனுமதிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தகவலை ஜம்மு கஷ்மீர் சிவில் சொசைடி என்கிற அமைப்பு தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த சிறுமி மற்றும் அவரது தந்தை காவலில் வைக்கப்பட்டிருப்பது மாநில அதிகாரத்திற்கு அப்பாற்ப்பட்டது என்றும் இது அவர்களது குடும்பதிற்கு அழுத்தம் கொடுத்து இந்த வழக்கை திரும்பப்பெற வைப்பதர்க்கத் தான் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இன்னும் அந்த சிறுமியின் குடும்பம் அவரையும் அவர் தந்தையயும் உடனடியாக விடுவிக்க கூறி சட்ட உதவியை நாடியுள்ளனர் என்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உதவிகள் கிடைக்ககூடிய அனைத்து வழிகளும் தடுக்கப்பட்டு ராணுவத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வெளியுலக தொடர்புகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

Comments are closed.