காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்தது: மோடி

0

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய மோடி, ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததையும், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையும் சுட்டிக்காட்டினார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற குண்டுவெடிப்புகள் நாடு முழுவதும் நடந்ததாக குறிப்பிட்ட நரேந்திர மோடி, குண்டுவெடிப்பு நடக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் தான் காரணம் என கூறி உலக நாடுகளிடம் கண்ணீர் சிந்துவதையே காங்கிரஸ் வழக்கமாகக கொண்டிருந்ததாக விமர்சித்தார்.

தமது ஆட்சிக்காலத்தில் ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், தீவிரவாதிகளை அவர்களது இடத்தில் வைத்தே  தாக்கப்படுவதாக மோடி கூறினார். பாஜகவுக்கு வாக்களிப்பதன் மூலம், இந்தியா மேலும் வலிமை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.