காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத்தில் மூன்று முஸ்லீம்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

0

காங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசத்தில் மூன்று முஸ்லீம்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

முன்னர் ஆட்சி செய்த பாஜக அரசின் வழியை பின்தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் பசுவதை என்கிற பெயரில் முஸ்லீம்களை வதைக்க தொடங்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கந்தவா நகரில் நதீம், ஷகீல் மற்றும் அசாம் எனும் மூவர் மீது பசுவதை குற்றம் சுமத்தி அவர்கள் மீது கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவியுள்ளது காங்கிரஸ் கட்சி. இந்த சட்டத்தின் மூலம் கால வரையறை இன்றி ஒருவரை தடுப்புக் காவலில் வைக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையின் கூற்றுப்படி நதீம் மற்றும் ஷகீல் ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை காலை பசுவதைக்காக கைது செய்யப்பட பஜ்ரங்தள் அமைப்பினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததை அடுத்து அசாம் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட இடத்தில் இருந்து பசுவின் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் பால் கொண்டு செல்லும் பாத்திரங்களில் இறைச்சியை கொண்டு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

முன்னர் மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த ஷிவ்ராஜ் சவ்ஹானின் பாஜக அரசு பசுவதைக்காக 2016 முதல் 2017 வரை இதே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுமார் 22 நபர்களை கைது செய்திருந்தது. தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியும் இவரது வழியை பின்பற்றியுள்ளது.

தேர்தலை ஒட்டி காங்கிரஸ் மட்டும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் பசுக்களை பாதுகாக்க திட்டங்களையும் கோமியம் மற்றும் மாட்டு சாண உற்பத்தியை பெருக்கும் திட்டங்களையும் போட்டி போட்டுக்கொண்டு அறிவித்தனர்.

கடந்த மாதம் மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத், வருகிற நான்கு மாதங்களில் 1000 பசு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருதார். அத்தகைய மையங்களை நடத்துபவர்கள் அதனை அரசு நிலங்களில் நடத்தலாம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இத்துடன் கால்நடை அமைச்சர் லகான் சிங் யாதவ், சொகுசு கார்கள் வாங்குபவர்களுக்கு இதற்கென தனி வரி விதிக்கப்படும் என்றும் அதன் வரிப்பணம் பசுக்களின் நலனுக்காக செலவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.