காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல் காந்தி!

0

மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து ராகுல் காந்தி அறிக்கையை வெளியிட்டார். அதில் “காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுவதில் பெருமை கொள்வதாக தெரிவித்து உள்ளார். மேலும் அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘தனது நாட்டுக்கும் கட்சிக்கும் தாம் பெருமளவு கடமைப்பட்டு உள்ளேன். காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு தாமே பொறுப்பு.

தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன். 2019 தேர்தல் தோல்விக்கு பல்வேறு நிர்வாகிகளை பொறுப்பாக்க வேண்டி இருக்கும். கட்சித் தோல்விக்கு மற்றவர்களை பொறுப்பாக்கிவிட்டு தனது பொறுப்புகளை தட்டிக் கழிப்பது சரியாக இருக்காது.

அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பதை நான் அறிவிக்க வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தினர். அடுத்த தலைவரை, நான் தேர்வு செய்வது முறையாக இருக்காது. கட்சியை யார் துணிச்சலுடன் வழி நடத்துவார்கள் என்பதை கட்சியே முடிவு செய்யும்.

தாம் ராஜினாமா செய்த உடனேயே நிர்வாகக் குழு ஒன்றை ஏற்படுத்துமாறு செயற்குழுவில் தெரிவித்துள்ளேன். நிர்வாகக் குழு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணியை தொடங்க வேண்டும் என்று யோசனை கூறினேன்.

பாஜக மீது தமக்கு எந்தவித கோபமும் இல்லை, எனது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் பாஜக கொள்கையை எதிர்க்கும். இந்தியாவை பற்றிய தமது கருத்தோட்டம் பாஜக கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுப்பட்டதாகும்.

இந்த போராட்டம் புதிதல்ல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது மண்ணில் நடந்து வரும் போராட்டம் தான். பாஜக ஆட்சியில் இல்லாத இடங்களில் எல்லாம் நான் ஒற்றுமையை பார்க்கிறேன்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.