காங்கிரஸ் பட்டன் வேலைசெய்யவில்லை! வாக்கு இயந்திரத்தில் திட்டமிட்டு சதியா?

0

நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி மே மாதம் 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் காங்கிரஸ் சின்னத்தில் உள்ள பட்டன் வேலை செய்யவில்லை என புகார் வந்தது.

வாக்குப்பதிவு இயந்திரத்திலுள்ள இந்த முறைகேடு குறித்து தேர்தல் துணை ஆணையருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இயந்திரத்தின் பட்டன் வேலை செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள அந்த வாக்கு சாவடி அதிகாரி, இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் காஷ்மீரில் உள்ள பல வாக்கு சாவடிகளில் இந்த நிலைமைதான் காணப்படுவதாகவும், இதற்கு தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வாக்காளார்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது திட்டமிட்டு செய்யப்பட்டது என பல வக்காளர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Comments are closed.