காசியாபாத் மாவட்டத்தில் கிருத்தவ பள்ளி மீது தாக்குதல்

0

காசியாபாத் மாவட்டத்தில் உள்ள இந்திராபுரம் என்ற பகுதியில் உள்ள மிஷனரி பள்ளி ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளது.

வெள்ளி அதிகாலை 3:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடையாளம் தெரியாத மூன்று பேர் ஒரு வேனில் வந்து அந்த பள்ளியின் உள்ளே கற்களை வீசியுள்ளனர். பின் அங்கிருந்த காவலாளிகள் அவர்களை பிடிக்க முயன்ற பொழுது அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அதற்கு ஒரு 40 நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் மீண்டும் அங்கு வந்து கல் எறிந்ததாக கூறப்படுகிறது .

இந்த சம்பவம் அறிந்து அங்கு விரைந்த காவல் துறை இது குறித்து விசாரணையை தொடங்கியிருக்கிறது. கிறிஸ்தமஸ் தினமான நேற்று நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.