காட்டுப்பள்ளி துறைமுகம்: அதானியின் வளர்ச்சியும்  இயற்கையின் அழிவும்

0

காட்டுப்பள்ளி துறைமுகம்: அதானியின் வளர்ச்சியும்  இயற்கையின் அழிவும்

2014ல் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, எல்லா வெளிநாட்டு பயணங்களிலும் உடன் சென்றவர் அதானி. குஜராத்தில் இல்லாத வளர்ச்சியை இருந்ததாக உலகிற்கு காட்டியவர்கள் இந்த இரண்டு நபர்களும். தற்போது தமிழகத்தில் அதானிக்கு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம். இதில் நாட்டிற்கு என்ன இலாபம்? தமிழகத்திற்கு என்ன இழப்பு? ஏன் எதிர்க்க வேண்டும்? பார்ப்போம்.

சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டுப்பள்ளி துறைமுகம். 330 ஏக்கர் பரப்பளவிலான இத்துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் (லிணீக்ஷீsமீஸீ ணீஸீபீ ஜிஷீuதீக்ஷீஷீ லிtபீ – லி&ஜி) பாராமரித்து வந்தது. கடந்த 2015ம் ஆண்டு எல் அன்ட் டி நிறுவனத்தின் 97 சதவீத பங்குகளை ரூ. 1950 கோடி கொடுத்து கையகப்படுத்தியது அதானி நிறுவனம்.

காட்டுப்பள்ளி துறைமுகத்தை நவீனப்படுத்தவும் வர்த்தகத்தை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறுகிறார்கள். இதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.