காணாமல் போன நஜீபை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது 2.2கோடி நஷ்டஈடு

0

காணாமல் போன நஜீபை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது 2.2கோடி நஷ்டஈடு: நஜீபின் தாயார் நீதிமன்றத்தில் வழக்கு

காணாமல் போன ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் நஜீப் பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையிலும் அவரது வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையிலும் அவரது தாயார் ஃபாத்திமா நஃபீஸ் டில்லி உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளார். அதில் தன்னுடைய மகனை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா, டைம்ஸ் நவ், தில்லி ஆஜ்தக் ஆகியவற்றின் மீதும் டைம்ஸ் ஆஃப் இந்தியா  மற்றும் இந்தியா டுடே நிறுவனங்களின் செய்தியாளர்கள் மீதும் 2.2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், நஜீப் காணாமல் போன தினத்திற்கு முந்தைய தினமான 2016 அக்டோபர் 14  ஆம் தேதி இரவு, ஐஎஸ் அமைப்பில் சேருவது எப்படி என்பது தொடர்பாக இணையத்தில் நஜீப் தேடியதாகவும், ஐஎஸ் அமைப்பின் வீடியோ ஒன்றை பார்த்ததாகவும் டில்லி காவல்துறை கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது என்றும் இந்த செய்தி உண்மைதானா என்பதை உறுதி செய்ய பத்திரிகையாளர் எந்த ஒரு முயற்ச்சியையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017 மார்ச் மாதம் 21 ஆம் தேதி  டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான கட்டுரையில், நஜெப் காணாமல் போனதற்கு பின்னணி அவர் ஐஎஸ் அமைப்பில் இணைந்ததாக இருக்கலாம் என்று காவல்துறையின் உயர்மட்டத்தில் உள்ள அவர்களது நபர் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டது. இதன் நபகத்தன்மை குறித்து எதுவும் ஆராயாமல் வெளியிடப்பட்ட இந்த கட்டுரை மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இன்னும் ரைம்ஸ் நவ், “ஐஎஸ் குறித்து நஜீப் தேடினார்”, “ஐஎஸ் ஆதரவாளரா நஜீப்?” என்ற செய்திகளை வெளியிட்டது என்றும் இவர்களின் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பரப்பபட்டது என்றும் தனது மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி நிறுவனங்கள் அனைத்தும் டில்லி காவல்துறையிடம் இருந்து தான் தங்களுக்கு இந்த செய்தி கிடைத்தது என்று குறிப்பிட்ட போதிலும் டில்லி காவல்துறை இதனை மறுத்துள்ளதை நஃபீஸ் தந்து மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி தான் போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறை தன்னை மோசமாக நடத்திய காட்சிகளை ஊடகங்கள் பதிவு செய்தது என்றும் அது பின்னர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட போதிலும் தான் தனது மகனின் நன்மைக்காக அமைதி காத்ததாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த ஊடகங்கள் வெளியிடும் பொய்யான செய்திகள் தொடர்பாக டில்லி ஆஜ்தக் நிறுவனத்திற்கு தான் நோட்டீஸ் அனுப்பிய போதும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி நிறுவனங்கள் தங்களது பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டி தன்னை மிக மோசமான அவமானத்திற்கு உட்படுத்தியது என்றும் இதனால் தான் பெரும் மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் காணாமல் போன தன் மகனை குறித்த விசாரணை இன்னும் நடைபெற்று வரும் வேலையில் இத்தகைய செய்திகள் பெருவாரியான மக்கள் மனதில் தனது மகன் குறித்த வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த செய்தி நிறுவனங்கள் கூறிய குற்றச்சாட்டு எதிலும் உண்மையில்லை என்பதை காவல்துறை தெரிவித்த போதிலும் இந்த செய்தி நிறுவனங்கள் தங்களின் போலிச் செய்தி குறித்து வருத்தம் தெரிவிக்கவோ அல்லது மறுப்பு வெளியிடவோ இல்லை என்றும் அதனால் இந்த செய்திகளை அதன் அனைத்து வடிவில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இந்த போலியான செய்திகளை வெளியிட்டமைக்காக இந்த செய்தி நிறுவனங்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர்களின் இந்த செயலுக்காக நஷ்டஈடாக 2.2கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.