காத்தான்குடி படுகொலை:  25 ஆம் ஆண்டு நினைவலைகள்  

0

– நியாஸ்

கடந்த 1990 ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 3 ஆம் தேதி இரவு பள்ளியில் இஷா தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது  கொலை வெறி தாக்குதலை  விடுதலை புலிகள் நடத்தினர்.
இந்த தாக்குதலில்   103 முஸ்லிம்கள் சம்பவ இடத்திலே கோர மரணத்தை  தழுவினர். 140 பேர் படுகாயமடைந்தனர்
இத்தகுதலில்  பெரியவர் சிறுவர்  என பாரபட்சமின்றி  கண்ணில் பட்டவர்களை துப்பக்ககியால்  சுட்டு ம்  கையெறி கொண்டுகளை வீசியும் தாக்கினர்.
இலங்கை தமிழீழ வரலாற்றில் இது போன்ற கொடூர சம்பவத்தை முஸ்லிம்கள் சந்தித்தது கிடையாது. அந்த அளவிற்கு மிக மோசமான சம்பவமாக இந்நிகழ்வு கிழக்கு வாழ் முஸ்லிம்களின் நெஞ்சங்களில் ஆறாத ரணமாக பதிந்து விட்டது .
இலங்கையின் முன்னால் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கும் விடுதலை புலிகளுக்கும் 1989 ஆம்  ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக  இவ் ஒப்பந்தம்  1990 ஜூன் மாதம்  முறித்து கொள்ளப்பட்டது  இதனை அடுத்து புலிகள் தங்கள் இருப்பை தக்கவைக்கவும்  தங்களுடைய எல்லைகளை விரிவு படுத்தும் நோக்குடன் பல இடங்களில் முஸ்லிம்களையும் அவர்களின் இருப்பையும்  களையடுக்கும் சம்பவம்கள் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதன் உச்சபட்ச கோரம்தான் காத்தான்குடி படுகொலை. அத்துடன் முஸ்லிம்கள் புலிகளுக்கு எதிராக அரசாங்கத்துடன் இணக்கமான போக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
முஸ்லிம்களுக்கு இளைத்த இந்த அநீத செயலை பல முறை புலிகள்  நியாயப்படுத்தி வந்திருக்கின்றனர். ஆனால் வரலாறு அவர்களை மன்னிக்கவில்லை. புலிகனின் தலைவர்  பிரபாகரன் ஒரு கட்டத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது,வடக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 90 ஆயிரம் முஸ்லிம்களை  வெளியேற்றியது  எங்களின் வரலாற்று பிழை என ஒத்து கொண்டார்
25 ஆண்டுக்களுக்கு முன்னதாக நடந்த சம்பவங்களை மன்னிக்க முடிந்தாலும் மறக்க முடியாதது என்பதற்காகவே அந்த தடயங்களை அழிக்காமல்  இன்றைய இளைய சமூகத்துக்கு அத்தாட்சியாக நினைவு சின்னமாக புகை படங்கள் ,சிதைந்த பொருட்கள் ,பள்ளிவாசல்களின் சுவர்களில் துப்பாக்கி சூடுகள் மற்றும் கைக்குண்டு தாக்குதல்களின்  தடங்கள் என  அனைத்தையும்  காத்தான்குடி முஸ்லிம்கள்  பாதுகாத்து வருகின்றனர்.

Comments are closed.