காந்தியின் பன்முக தேசமும் பா.ஜ.க.வின் ஒற்றை தேசமும்

0

காந்தியின் பன்முக தேசமும் பா.ஜ.க.வின் ஒற்றை தேசமும்

காந்தியின் 150வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வேளையில் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கி காந்திக்கு பெருமை சேர்ப்போம் என மன்கிபாத் நிழ்ச்சியில் உரை நிகழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி. காந்தியின் போராட்டமும், முழக்கங்களும், காலணிய ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பும், தேச ஒற்றுமைக்கான முயற்சிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிறைய இருக்கின்றன. தேசமும், மக்களும் எப்படி இருக்க வேண்டும் என்ற பார்வை காந்திக்கு இருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வகையறாக்களுக்கு தங்கள் இந்துத்துவ சித்தாந்த பார்வையே கோலோச்சி இருக்கிறது. அதனால்தான் காந்தியின் போராட்டத்தையும், தியாகத்தையும் குறுகிய பார்வையோடு பார்க்கின்றனர். 150வது பிறந்த தின முழக்கங்கள் வெறும் பிளாஸ்டிக் ஒழிப்போடு சுருங்கிப் போவதோடு, காந்தி ஏற்றுக் கொள்ளாத ஒற்றை கலாச்சாரம், மொழி, இனம், ஒரே தேசம் என்ற மக்கள் விரோத திட்டங்களையும், ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் இவர்கள் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.