காந்தியை கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை: பாஜக அமைச்சர்!

0

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை வணங்குவதில் தவறில்லை என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

பாஜகவினருக்கு மகாத்மா காந்தி மீது வெறுப்பு இருப்பதாகப் பல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப சாத்வி பிரக்யா உள்ளிட்ட பலரும் காந்தியைக் கொன்ற கோட்சேவை புகழ்ந்து வருகின்றனர்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை பாஜக அரசு கொண்டாடியது. மக்கள் மத்தியில் பாஜக மீது நல்ல எண்ணத்தை உருவாக்குவதற்காக, பிறந்த நாளையொட்டிபாஜக அரசு திட்டங்களை அறிவித்தது. மோடி உள்ளிட்ட பல பாஜகவினர் காந்தை புகழ்ந்து தள்ளினர்.

இத்தகைய அனைத்தும் நாடகம் என்று தெரியவந்துள்ளது. மக்களவை கூட்டத் தொடரில்  விவாதத்தில் மத்திய கலாச்சார அமைச்சர் பிரகலாத் சிங் படேல், காந்தியைக் கொன்ற கோட்சேவை வணங்குவது தவறில்லை எனவும் இதைத் தாம் பெருமையுடன் நெஞ்சை உயர்த்தி சொல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.