கார்பரேட் அரசை மாற்ற தமிழர்களும், கேரள மக்களும் ஒன்றிணைய வேண்டும்: உதய குமார்

0

சமுதாய பிரச்சனைகளுக்கு எதிராக தமிழர்களும் கேரள மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று அணு உலை எதிர்ப்பாளர் உதய குமார் தெரிவித்துள்ளார்.

“தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை, கூடங்குளம் அணு உலை , ஐஓசி முனையம், அலப்பாடு சுரங்கப்பணிகள் போன்ற மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராகப் போராடும் தமிழர்களுக்கும், கேரள மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் அதிகரிக்க வேண்டும்.

கேரள மக்களும், தமிழர்களும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இணைந்து போராடினால், கார்பரேட் வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ள அரசுகளை மாற்ற முடியும். பாசிச பிடியில் சிக்காத இரண்டு மாநிலங்கள் தமிழகம் மற்றும் கேரளா என்பது அண்மையில் வெளியான மக்களவை தேர்தல் முடிவுகளில் நிரூபணமானது” என்று உதய குமார் தெரிவித்தார்.

 

Comments are closed.