காவல்துறையால் கற்பழிக்கப்பட்ட ஆதிவாசி பெண்கள்: பாதிக்கப்பட்ட பெண்களை கைது செய்த காவல்துறை

0

மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி பகுதியை சேர்ந்த இரண்டு ஆதிவாசி பெண்கள் காவல்துறையினரால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கற்பளிக்கப்பட்டதாக கூறப்படும் ஜனவரி 25 ஆம் தேதியில் இருந்து அவர்களை காணவில்லை என்பதால் அவரது சகோதரர் பாம்பே உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அன்றைய தினம் முழுவதும் அவரது மனு விசாரணைக்கு வராத காரணத்தினால் வீடு திரும்பியுள்ளார் அவர். அதே நிறம் இந்த கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்களும் வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களின் நிலையை கேட்டறிந்த குடும்பத்தினர் அப்பெண்களை அழைத்துக்கொண்டு தங்களது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து புகாரளிக்க வந்த நான்கு பேரை கடத்திச் சென்றுள்ளனர். முதலில் காவல்துறை சீருடையில் வந்த சிலர் சின்னு கோடா என்பவரை இழுத்துச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து தங்களை காவலர்கள் என்று கூறிக்கொண்டு சாதாரண உடுப்பில் வந்த சிலர் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட இரு பெண்களையும் சைனு கோடா வின் மனைவி ஷீலா கோடாவையும் கடத்த முயற்சித்துள்ளனர். அவர்களிடம் அவர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கான அடையாள அட்டையை வழக்கறிஞர் கேட்டும் அதனை அவர்கள் தர மறுத்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற நேரம் இரவு 7:30 மணி என்பதனால் அந்த நேரத்தில் பெண்களை கைது செய்ய முடியாது என்று வழக்கறிஞர் அவர்களிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். ஆனால் சில நேரம் கழித்து மீண்டும் வழக்கறிஞர் அலுவலகம் வந்த அதே கும்பல் அந்த பெண்களை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளது என்று வழக்கறிஞர் நிஹால் சிங் ரதோட் தெரிவித்துள்ளார்.

இந்த பெண்கள் கற்பழிக்கப்பட்டதற்கும் அவர்கள் பின்னர் கடத்தப்பட்டதற்கும் காரணம் கட்சிரோலி பகுதி மக்கள் அந்தப் பகுதியின் சுர்ஜகாத் சுரங்க திட்டத்தை எதிர்ப்பது தான் என்று கூறப்படுகிறது. இதனாலேயே காவல்துறை மூலம் அவர்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் பல துன்புறுத்தல்கள் கொடுக்கப்படுவதாக வழக்கறிஞர் ரதோட் தெரிவித்துள்ளார்.

கட்சிரோலி காவல்துறை கமாண்டோக்களால் ஆதிவாசி பெண்கள் கற்பழிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவர்களுக்காக நியாயம் கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் காவல்துறையோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது வாகனத்தையும் பறித்து வைத்துள்ளது. இவர்கள் மீது காவல்துறையின் பணியை தடுத்தது கிளர்ச்சி செய்தது என்பது போன்ற வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.