காவல்துறையால் சித்திரவதை செய்யப்படும் கதுவா கற்பழிப்பு வழக்கு சாட்சி தாலிப் ஹுசைன்

0

காவல்துறையால் சித்திரவதை செய்யப்படும் கதுவா கற்பழிப்பு வழக்கு சாட்சி தாலிப் ஹுசைன்

கதுவாவில் சிறுமி கடத்தப்பட்டு கூட்டாக கற்பழிப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியான தாலிப் ஹுசைன் என்பவரை போலி கற்பழிப்பு வழக்கில் கைது செய்த காவல்துறை அவரை கடுமையாக சித்தரவதை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அவரது உறவினர் உச்ச நீதிமன்றத்தில் அளித்த ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி D.Y.சந்திரசூத், நீதிபதி இந்திரா பானர்ஜீ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரிக்கின்றது. தாலிப் ஹுசைனின் குடும்பம் தங்கள் மனுவில் தாலிப் ஹுசைன் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு கடுமையாக சித்திரவதை செய்யப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் சார்பாக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், சம்பா பகுதியில் வைத்து தாலிப் ஹுசைன் காவல்துறையால் சித்திரவதை செய்யப்படுகிறார் என்றும் இதில் நீதிமட்ன்றம் தலையிட வேண்டும் என்று தாங்கள் கோருவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக கதுவா கற்பழிப்பு வழக்கை, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தங்கள் குடும்பத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியதால் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது இவ்வழக்கின் முக்கிய சாட்சியான தாலிப் ஹுசைன் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் செய்தி வெளியாகியுள்ளது.

Comments are closed.