காவல்துறை அதிகாரியை கொலை செய்த பசு குண்டர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பா.ஜ.கவினர்!

0

உ.பியில் காவல்துறை அதிகாரியை கொலை செய்து ஜாமினில் வெளிவந்த பசுக் குண்டர்களுக்கு, பாஜகவினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உ.பியில் புலந்த்ஷர் மாவட்டத்தில், குக்கிராமத்தில் மாடுகளை வாகனங்களில் ஏற்றி செல்வதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே நூற்றுக்கணக்கான பசுக் குண்டர்கள் அந்த இடத்திற்கு விரைத்தனர்.

இதனையடுத்து மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்கள் மீது பசுக் குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கிருந்த வாகனங்களை தீவைத்து எரித்தனர். கலவரத்தை அடக்க முயற்சித்த காவல்துறை மீதும் இந்த வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவலர் சுபேத் குமார் கொல்லப்பட்டார். இதனால் பா.ஜ.க அரசு சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து 6 பசுக் குண்டர்களை கைது செய்தது.

இந்நிலையில் இக்கொலை வழக்கிலிருந்து கைதான 6 பசுக் குண்டர்களும் ஜாமினில் வெளி வந்தனர். காவல்துறை அதிகாரியை கொலை செய்து வெளிவந்த பசு குண்டர்களை, பாஜக அரசு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.