காவல்துறை அரங்கேற்றும் பயங்கரவாதம்?

0

காவல்துறை அரங்கேற்றும் பயங்கரவாதம்?

ஜனவரி 11 அன்று கஷ்மீரின் குல்காம் பகுதியில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் கமாண்டர் நவீத் பாபுவை அவரின் கூட்டாளி அல்தாஃப் மற்றும் வழக்கறிஞர் இர்பான் அகமது மிர் ஆகியோருடன்  காவல்துறை கைது செய்தது. தலைநகர் டெல்லிக்கு செல்ல அவர்கள் தயாராக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக கஷ்மீர் காவல்துறை தெரிவித்தது. சமீபத்தில் வெளி மாநிலங்களை சார்ந்த தொழிலாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டு உள்ளிட்ட வழக்குகள் நவீத் மீதுள்ளன. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். குடியரசு தினத்திற்கு சில தினங்களுக்கு முன் இவர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை அதிகரித்தது. ஆனால், இவர்களுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு நபரின் பெயர் வெளிவந்தது பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.

தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு நபர் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங்! கைது செய்யப்பட்ட சமயத்தில் இவர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்த கைதிற்கு சில தினங்களுக்கு முன் வெளிநாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூதுவர்கள் அடங்கிய குழு கஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது. இவர்களின் பாதுகாப்பு குழுவிலும் தேவிந்தர் இடம் பெற்றிருந்தார். காவல்துறையில் வீரதீர செயல்கள் புரிந்ததற்காக இவருக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட இருந்தது. தீவிரவாதிகளுடன் டி.எஸ்.பி.க்கு என்ன வேலை? … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.