காவித் தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய தீவிரவாத தடுப்புப்படை மும்முரம்

0

காவித் தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய தீவிரவாத தடுப்புப்படை மும்முரம்

மும்பை, புனே, சாதாரா, சோலாபூர் மற்றும் சங்க்லி பகுதிகளின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி தீவிரவாத தாக்குதல் நடத்த இருந்த சனாதன் சன்ஸ்ந்தா அமைப்பை சேர்ந்த பலரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு கைது செய்தது. ஏற்கனவை இந்த தீவிரவாத அமைப்பை தடை செய்யும் திட்ட வரைவு மத்திய அரசிற்கு பல முறை அளிக்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப்படை இந்த அமைப்பை தடை செய்ய தனியே புதிதொரு முன்வறைவை தயார் செய்துள்ளது.

பல ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்ட இந்து தீவிரவாதிகள் வைபவ் ரவுத், சுந்தவா கொந்தலேகர், ஸ்ரீகாந்த் பங்கர்க்கர், சரத் கலஸ்கர் போன்றோரிடம் மத்திய புலனாய்வுத்துறையும் தீவிரவாத தடுப்புப்படையும் விசாரணை நிடத்தின. இதில் கொந்தலேகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவினாஷ் பவார் என்பவர் குறித்து ATS இற்கு தெரிய வந்துள்ளது. மும்பையின் காட்கோபர் பகுதியை சேர்ந்த இவரிடம் விசாரணை நடத்த தீவிரவாத தடுப்புப்படை முயல அவர் விசாரணைக்கு ஒத்துலைப்புத்தர மறுத்துள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்படு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இவரின் கைது சனாதன் சன்ஸ்தா மீதான தடையை உறுதி செய்யும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட இந்த ஐந்து நபர்களுக்கும் சனாதன் சன்ஸ்தாவிர்க்குமான நேரடி தொடர்புகள் எதுவும் இல்லை என்ற போதிலும், இவர்களின் சமூக வலைத்தள கணக்குகள், தொலைபேசி அழைப்பு தகவல்கள், வாங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் இன்ன பிற தகவல்கள் இந்த அமைப்புடனான இவர்களின் தொடர்பை உறுதி செய்யும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது இவர்களின் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தாங்கள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் உள்ள விஷயங்களை விளக்கி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தீவிரவாத தடுப்புப்படை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட இந்த ஐந்து நபர்களுக்கும் சனாதன் சன்ஸ்தா அமைப்பின் கிளை அமைப்பான ஹிந்து ஜஞ்சாகுருதி சமிதி அமைப்புடன் தொடர்பு உள்ளது என்றும் சில வழக்குகளில் இவர்களுக்கு சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் நேரடி தொடர்பு உள்ளது என்றும் ATS தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு IPS அதிகாரி ராகேஷ் மரியா ATS இன் தலைவராக இருந்த போது சனாதன் சன்ஸ்தாவிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட அறிக்கையில், 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி ஜோதா அக்பர் திறப்படம் திரையிடப்பட்ட பன்வேல் பகுதியில் உள்ள சினிராஜ் திரையரங்கத்தின் மீதான வெடிகுண்டு தாக்குதல், அதே ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி, விஷ்ணுதாஸ் பாவே அரகத்திற்குள் ஆமி பச்புதே என்ற நாடகம் நடைபெறும் போது வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதல், ஜூன் மாதம் 4 ஆம் தேதி அதே நாடகம் நடந்த ராம் கணேஷ் அரங்கத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் ஆகியவற்றை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அந்த ஆறு பேர்களில் ஐந்து பேர் சனாதன் சன்ஸ்தா அமைப்பில் தங்களை சேர்த்துக்கொள்ள முயன்றவர்கள் என்றும் ஒருவர் சனாதன் சன்ஸ்தாவின் உறுப்பினர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், “வாஷி, பன்வெல், தானே மற்றும் கோவாவில் நடைபெற்ற இந்த சம்பவங்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோத கூட்டமைப்பு ஒன்றை வைத்து இரு மத பிரிவினர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி சமூக நல்லிணக்கத்தை குலைப்பதற்காக பிறரை தீவிரவாத செயல்களில் ஈடுபட தூண்டியதும், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதும், இதன் மூலம் இந்திய அரசிற்கு எதிராக போர் தொடுத்ததும் தெளிவாகியுள்ளது.” என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் மீது எந்தவித நடவடிக்கையும் மத்திய அரசின் தரப்பில் இருந்து எடுக்கப்படாத காரணத்தால் 2015 ஆம் ஆண்டு இவ்வமைப்பை மீண்டும் தடை செய்ய ஹிம்ன்ஷு ராய் தலைமையிலான மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப்படை புதிய முயற்சி மேற்கொண்டது. பிரபல பகுத்தறிவாதிகளான நரேந்திர தபோல்கர் மாறும் கோவிந்த் பன்ஸாரே ஆகியோரின் கொலைகளுக்கு சனாதன் சந்தா அமைப்பின் உறுப்பினர்கள் தேடப்பட்ட நிலையில் அவ்வமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை அப்போது வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையும் இன்னும் நிலுவையில் தான் உள்ளது. இந்த தடை உத்தரவு குறித்து மத்திய அரசு பல விளக்கங்களை கேட்ட போதிலும், பல பெயர்களில் இயங்கும் ஒரு அமைப்பின் ஒரு பிரிவை மட்டும் தடை செய்வது பயனளிக்காது என்று மகாராஷ்டிரா ATS தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாநில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க எந்த ஒரு இயக்கத்தையும் அது தீவிரவாத செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது நாட்டிற்கு எதிராக யுத்தம் புரிந்தாலோ அவ்வமைப்பை மத்திய அரசு தடை செய்ய முடியும்.

Comments are closed.