காவிமயமாக்கப்படும் கல்வி, பாடப்புத்தகத்தில் இருந்து அழிக்கப்படும் இஸ்லாமிய வரலாறுகள்

0

இந்திய கல்விமுறையை காவி மயமாக்கும் முயற்சி வெகு வேகமாக நடந்து கொண்டிருக்குறது. ஆளும் பா.ஜ.க அரசு இந்திய பாட புத்தகத்தில் இருந்து இஸ்லாமிய கலாச்சாரத்தையும் வரலாறையும் பாடப்புத்தகத்தில் இருந்து ராஜஸ்தான் நீக்கி வருகிறது.

காங்கிரஸ் தேசிய சிறுபான்மை தலைவர் குர்ஷித் அஹ்மத் ராஜஸ்தான் அரசின் இத்தகைய நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ராஜஸ்தான் மாநில கல்வித்துறை பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து முஸ்லிம்களின் கலாச்சாரங்கள் குறித்தும் வரலாறு குறித்தும் வெளிநாட்டு எழுத்தாளர்கள் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களின் பாட திட்டங்களை நீக்கி வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசாங்கத்தின் அடிச்சுவடிகளை பின்பற்றி வசுந்தரா ராஜேவின் அரசு சிறுபான்மையினரின் வரலாறை புறக்கணிக்கிறது கல்வியை காவிமயமாக்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.