காஷ்மிர் விவகாரம்: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை!

0

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்சனையில் தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காஷ்மிர் பிரச்சனையில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் அமெரிக்க உதவ தயாராக உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அது இரு தரப்புப் பிரச்சனை என்றும், காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காஷ்மிருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்ட்டகஸிடம் காஷ்மிர் தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கின்றதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது மாற்றம் இல்லை என்று தெரிவித்த அவர், காஷ்மிர் பிரச்சினைக்கு மூன்றாவது நபர்  இல்லாமல் இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வு காண வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என்றார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply