காஷ்மீரில் வெளியூர் பத்திரிகையாளர்களுக்கு தடை!

0

காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் வெளியூர் பத்திரிகையாளர்கள் காஷ்மீருக்குள் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் முக்கிய தலைவர்கள் வீட்டை வீட்டு வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ராணுவத்தினர், அதிரடி படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஜம்முவில் அரசு மற்றும் தனியார்ப் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இண்டெர்நெட் மற்றும் மொபைல் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, தான் சிறையில் உள்ளது போல் உணர்வதாக முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம். 370ஐ அகற்றுவதற்கான ஒருதலைபட்ச முடிவு சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளூர் பத்திரிகையாளர்களைத் தவிர வெளியூரிலிருந்து பத்திரிகையாளர்கள் யாரும் காஷ்மீருக்குள் வரவேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே வீட்டுக் காவலில் உள்ள முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காஷ்மீரில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Comments are closed.