காஷ்மீரை விட அதிகமான வன்முறை களம் கொண்டது மேற்கு வங்காளம்

0

காஷ்மீரை விட மிக அதிகமான வன்முறைகள் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ‘நியூஸ் 18’ அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது எந்தவித வன்முறையும் இல்லை. ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது வன்முறைகள் நிகழ்ந்தன. ஆனால், இதை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. நடுநிலையான ஊடகங்கள் கூட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து செய்தி வெளியிடுவதன் மூலமாக காஷ்மீர் விவகாரத்தை பெரிதாக்கி காண்பித்தன. ஆனால், காஷ்மீர் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் வளம் குறித்தும் ஊடகங்கள் சொல்லியிருக்க வேண்டும் என்றார் மோடி.

Comments are closed.