காஷ்மீர் எல்லையில் தாக்குதல்: இந்திய ராணுவ வீரர் “லான்ஸ் நாயக் முகமது ஜாவத்” மரணம்

0

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று திடீர் என்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சை பலனலிக்காததால் இன்று அவர் பரிதாமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதில், “லான்ஸ் நாயக் முகமது ஜாவத் நேற்று ராணுவம் நடத்திய தாக்குதலில் காயமடைந்தார். இதனையடுத்து இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜாவத் ஒரு சிறந்த ராணுவ வீரர். அவர் நாட்டிற்காக ஆற்றிய தியாகத்திற்கு இந்திய நாடு எப்போதும் கடன் பட்டிற்கும்’ என தெரிவித்தார்.

லான்ஸ் நாயக் முகமது ஜாவத் பீகார் மாநிலத்தின் ககாரியா மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி மணைவி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ராணுவ அதிகாரிகள் ஆழந்தை இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Comments are closed.