காஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்

0

ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் .நா. மனித உரிமை ஆணையத்தின் 43-ஆவது அமர்வு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மஸாரி பேசியதாவது: இந்திய அரசு கஷ்மீர் மக்களிடம் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீரில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என 6,000க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனனர். அவர்களை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் செயலற்று இருந்தால், அது சர்வதேச சட்டங்களுக்கு எதிராக இந்தியா துணிவுடன் செயல்பட வழிவகுக்கும்.

மேலும் அங்கு தொலைத்தொடர்பு சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் ரத்து செய்யவேண்டும் என்று ஷிரீன் மஸாரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் வருடாந்திர கூட்டம் செப்டம்பரில் நடைபெற்றது. அதில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி இந்தியா மீது குற்றம்சாட்டினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த  அமைச்சர் ஜித்தேந்திர சிங், “காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவோ அல்லது முழுமையான தடையோ இல்லை. சில கட்டுப்பாடுகள் மட்டுமே உள்ளன. இந்தியா மீது குற்றம்சாட்டிய பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்என்றார்.

Comments are closed.