காஷ்மீர் பெண்களை திருமணம் செய்ய தொண்டர்கள் உற்சாகம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து!

0

இனிமேல் காஷ்மீர் பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று பாஜக எம்எல்ஏ சைனி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாஜக தொண்டர்கள் காஷ்மீர் சிறுமிகளை திருமணம் செய்ய உற்சாகமாக உள்ளனர் என்று பாஜக எம்எல்ஏ சைனி தெரிவித்து உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முசாபர்பர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ விக்ரம்சிங் சைனி, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசும் போது, கட்சித் தொண்டர்கள் தற்போது உற்சாகமாக உள்ளனர். அவர்கள் இனிமேல் காஷ்மீரில் உள்ள அழகான பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

இவர் கடந்த ஜனவரி மாதம் ‘இந்த நாட்டில் வாழ பாதுகாப்பற்றதாக உணருபவர்கள் மீது குண்டு வீச வேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய சைனியின் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.