காஷ்மீர் விவகாரம்: “இதற்காகதான் வாழ்நாளில் காத்திருந்தேன்”- சுஷ்மா ஸ்வராஜ்!

0

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்று இரவு உயிரிழந்துவிட்டார்.

உடல்நலக் குறைவு காரணமாகக் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் இருந்த சுஷ்மா ஸ்வராஜ், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைப் பற்றி ட்விட் செய்துள்ளார். அதில் “பிரதமருக்கு நன்றி. எனது வாழ்நாளில் இந்த நாளைக் காணதான் காத்திருந்தேன்” என்று பதிவிட்டிருந்தார்.

நேற்று இரவு நெஞ்சு வலி காரணமாக சுஷ்மா ஸ்வராஜ எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள், “சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்” என்று கூறினர்.

டெல்லி முதல்வர், மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த சுஷ்மா ஸ்வராஜ் கடந்த மோடி ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பை எற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.